ப்ளூ வேல் கேமை ஷேர் செய்தால் கடும் தண்டனை: மதுரை ஐகோர்ட்
ப்ளூ வேல் விளையாட்டை பகிர்ந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபி-க்கு மதுரை ஐகோர்ட் கிளை யோசனை தெரிவித்துள்ளது.
ப்ளூ வேல் விளையாட்டால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மதுரை ஐகோர்ட் கிளை தானாக முன்வந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்தது.
இன்று இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை ப்ளூ வேல் விளையாட்டை பகிர்ந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஷேர்இட் போன்ற ஊடகங்கள் மூலம் பகிர்வோம் மற்றும் இந்த விளையாட்டினை டவுண்லோட் செய்ய உதவுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விளையாட்டினை தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். ப்ளூ வேல் விளையாட்டை பரவால் இருக்க கண்காணிப்புக்களை அதிகரிக்க வேண்டும். இதை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் கேட்டு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.