தமிழ் அணங்கு vs தமிழ் தாய்... வெல்லப் போவது யார்?
தமிழ் அணங்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பும் இப்படி இருக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பு போட்டியிருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தமிழணங்கு படத்தை பதிவிட்டிருந்தார். அதற்கு போட்டியாக பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தமிழ் தாயின் படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் கண்டிக்கும் விதமாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் அணங்கின் படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது.
மேலும் படிக்க | சத்குருவிற்கு முழு ஆதரவு - உலக முஸ்லீம் லீக்!
அகோரமான ஒரு படத்தை பதிவு செய்து அதைதான் தமிழ் அணங்கு என்று சொல்வதா என வலதுசாரியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அதே சமயம் தமிழர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதை நீங்கள்தான் அகோரமாக பார்க்கிறீர்கள் என்று ஒரு தரப்பும் குரல் கொடுத்தனர். இந்த விவகாரம் கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் இன்று முதல்வர் போட்ட ஒரு டிவீட் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் புனிதராக அறிவிக்கப்பட்டதால் வாடிகனில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனை குறிப்பிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே என்று தமிழ் அணங்கின் படத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும் படிக்க | மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிடும் விடுதலைப் புலிகள்? உளவுத்துறை எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ் தாயின் படத்தை போட்டு அதே அதே பாடலை பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் வரைந்த அந்தப் படத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுதான் பா.ஜ.க-வினரின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் திராவிட ஆரிய போட்டி மீண்டும் டிவிட்டரில் தொடங்கியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR