வரும் மார்ச் 16-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஸன் வேலைகள் நிறுத்தப்படும் என தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாகும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Qube, UFO உள்ளிட்ட டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள், திரைப்பட ஒளிபரப்புக்கான கட்டணத்தை  குறைக்க வேண்டும் என கடந்த மாரச் 1-ஆம் நாள் முதல் புதுப்டங்களை வெளியிடாமல், தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... டிஜிட்டல் புரொஜக்டர் தொடர்பான VPF கட்டணத்தை தயாரிப்பாளர்கள் ஏற்க இயலாது எனவும், திரையரங்கு கட்டணத்தை படத்திற்கு ஏற்ப குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும், ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் இல்லையெனில் அனைத்து திரையரங்குகளிலும் கணினி மூலம் டிக்கெட் வழங்கும் முறையை அமல் படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு தாங்களே கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்!