இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில் வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடுப்பூசி (Corona Vaccine) போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும் மத்திய அரசு சார்பில் கோவின் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. அதன்படி கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள CoWIN App இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இது ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு ஏற்ற வடிவில் கோவின் என்ற செயலியாகவும் கிடைக்கிறது.


ALSO READ | Biological-E தயாரிக்கும் Corbevax மற்ற தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது


இந்த இணையதளத்தில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. இந்த இணையதளத்தில் புதிதாக மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், தமிழ் மொழி இல்லாமல் இருந்தது. 


இதற்க்கு தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தவகையில் CoWIN இணையதள பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி இதையடுத்து, ஆங்கிலம், இந்தி தவிர எஞ்சிய மொழிகளை கோவின் செயலியில் இருந்து நீக்கிய மத்திய அரசு 2 நாட்களில் தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என்று உறுதியளித்தது.  


இந்நிலையில், கோவின் இணையதளத்தில் இன்று தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில் மொத்தம் 12 மொழிகள் இடம்பெற்றுள்ளன. அதில், ஆங்கிலம், தமிழ், மலையாலம், இந்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அசாமி, பெங்காலி, கன்னடம், ஒரியா ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளன.  


ALSO READ | COVID-19 Vaccine: கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான வழிமுறைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR