Biological-E தயாரிக்கும் Corbevax மற்ற தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது

இந்தியாவில் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்ட்  மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் தற்போது, பயன்பாட்டில் உள்ளன.

Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 8, 2021, 04:02 PM IST
  • Corbevax தடுப்பூசியை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயாலஜிகல்-இ (Biological-E) நிறுவனம் தயாரிக்கிறது.
  • சுமார் 30 கோடி Corbevax தடுப்பூசிகளை வாங்க, மத்திய அரசு ரூ.1,500 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • ஸ்பைக் புரதத்தை உடலுக்குள் செலுத்தும் போது, வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும்.
Biological-E தயாரிக்கும் Corbevax  மற்ற தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது title=

இந்தியாவில் COVID-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்ட்  மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் தற்போது,  பயன்பாட்டில் உள்ள நிலையில்,  மேலும் சில தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இந்த தகவலை நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில் உறுதிபடுத்தியுள்ளார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மூன்று தடுப்பூசிகளை தவிர பயன்பாட்டிற்கு வரும் தடுப்பூசிகளில் ஒன்று தான் கோர்பேவாக்ஸ் (Corbevax) ஆகும். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயாலஜிகல்-இ (Biological-E) நிறுவனம் தயாரிக்கிறது.  சுமார் 30 கோடி Corbevax தடுப்பூசிகளை வாங்க, மத்திய அரசு  ரூ.1,500 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோர்பேவாக்ஸ் (Corbevax) என்றால் என்ன?

கோர்பேவாக்ஸ் வைரஸின்,  SARS-CoV-2 என்னும் வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதியான ஸ்பைக் புரதத்தினால் (Spike protein)  உருவாக்கப்பட்ட தடுப்பூசியாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியால் ஆனது. ஸ்பைக் புரதத்தை  உடலுக்குள் செலுத்தும் போது, வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும்.

நோவாவாக்ஸ் (Novovax) என்னும் ஒரு புரத அடிப்படையிலான தடுப்பூசியையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான ஒப்புதல் கொடுக்கப்படவில்லை.Biological E  தயாரித்துள்ள கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசி தற்போது 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.

ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி; கொரோனாவிலிருந்து காக்கும் மூச்சு பயிற்சி

கோர்பேவாக்ஸ் மற்ற தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது

எம்.ஆர்.என்.ஏ (mRNA) தடுப்பூசிகள் (பைசர் மற்றும் மாடர்னா), வைரஸ் வெக்டர் தடுப்பூசிகள் (அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு / கோவிஷீல்ட் (Covishield,), ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஸ்பூட்னிக் வி (Sputnik V) அல்லது இன் ஆக்டிவேடட் தடுப்பூசிகள் (கோவாக்சின், சினோவாக்-கொரோனாவாக் மற்றும் சினோபார்மின் SARS-CoV- 2 தடுப்பூசி-வெரோ செல் (Vero Cell) ஆகியவற்றிற்கு இது வரை ஒப்புதல் கிடைத்துள்ளன

முமையான SARS-CoV-2 வைரஸின் கொல்லப்பட்ட துகள்களை உள்ளடக்கிய இனாக்டிவேடட் தடுப்பூசிகள், வைரஸின் முழு கட்டமைப்பையும் குறிவைத்து தகக முயற்சிக்கின்ற்ன

மறுபுறம், mRNA  மற்றும் வைரல் வெக்டர் (viral vector) COVID-19 தடுப்பூசிகளைப் போலவே, கோர்பேவாக்ஸும் (Corbevax,) ஸ்பைக் புரதத்தை மட்டுமே குறிவைக்கிறது, ஆனால் வேறு வழியில் செயல்படுகிறது.

வைரல் வெக்டர்மற்றும் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் ஒரு குறியீட்டைப் பயன்படுத்தி நம் உயிரணுக்களைத் தூண்டுவதற்கான ஸ்பைக் புரதங்களை உருவாக்குகின்றன.

மற்ற COVID-19 தடுப்பூசிகளைப் போலவே, கோர்பேவாக்ஸும் இரண்டு டோஸ்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்,

இருப்பினும், இது குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதால், இது நாட்டில் கிடைக்கும் மலிவான தடுப்பு மருந்தில் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோர்பேவாக்ஸ் இரண்டு டோஸ்களின் விலை ரூ.500 க்கும் அல்லது ரூ.400-க்கும் குறைவாக நிர்ணயிக்கப்படலாம் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விலை நிர்ணயம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று பயாலஜிகல்-இ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள பிற தடுப்பூசி விபரங்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News