தமிழ் படித்தோருக்கு முன்னுரிமை தரவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ் வழி கல்வி படித்தோருக்கு அரசு வேலையில் 20 சதவிதம் முன்னுரிமை தரவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
தமிழ் வழி கல்விமுறையில் படித்த திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2010ல் வெளியிடப்பட்ட அரசாணையை பின்பற்றி தனக்கு வேலை வழங்க வில்லை என்றும், மேலும் தனது சான்றிதழை சரிபார்க்கவும் தன்னை அழைக்க வில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ் வழி கல்வி படித்தோருக்கு அரசு வேலையில் 20 சதவிதம் முன்னுரிமை தரவேண்டும். இதைக்குறித்து அரசாணையை கட்டாயம் தமிழக அரசு பின்பற்ற வேண்டும். மேலும் 2010ல் வெளியிடப்பட்ட அரசாணையை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.