மனிதவளத்துறையின் சார்பிலே புதிதாக துவங்கப்பட்டிருக்கக்கூடிய இணையவழி நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு திமுக சார்பில் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் வே;வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


இன்று (03-07-2018) தமிழக சட்டப்பேரவையில் மத்திய பா.ஜ.க அரசின் மனிதவளத்துறையின் சார்பிலே புதிதாக துவங்கப்பட்டிருக்கக்கூடிய இணையவழி நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டேன்.


மத்திய பா.ஜ.க அரசினுடைய மனிதவளத்துறையின் சார்பிலே புதிதாக துவங்கப்பட்டிருக்கக்கூடிய இணையவழி நூலகத்தில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றுமே இடம்பெற்று இருக்கிறது. இது உள்ளபடியே மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.


தமிழ் மட்டுமல்ல, மலையாளம், தெழுங்கு, கன்னடம் ஆகிய தென்னக மொழிகள் அனைத்துமே முழுமையாக புறக்கணிக்கப்பட்டு தெற்கு, வடக்கு என்ற பிளவு மனப்பான்மை நீர் வார்க்கப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே, திட்டமிட்டு பரப்பக்கூடிய இத்தகையை வெறுப்பும், விரோதமும் மிக மிக கண்டனத்திற்கு உரியதாக அமைந்திருக்கிறது.


நம் இந்திய நாடு குறித்தும், இந்த நாட்டினுடைய கலாச்சாரம் குறித்தும், அனைத்து நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்த இணையவழி நூலகம் உதவும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


மூன்று இலட்சம் எழுத்தாளர்களின் ஒரு கோடி நூல்கள் இதில் இடம் பெற்றிருந்த போதிலும் தமிழகத்தைச் சார்ந்த வரலாற்று நூல்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் நூல்கள் இதிலே இடம் பெறவில்லை என்பது வேதனையளிக்கிறது.