H. ராஜா-வுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழக தலைவர்கள்!
திரிபுராவை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையை அகற்ற வெகுநாட்கள் இல்லை என H.ராஜா ட்விட்டரில் பதிவிட்டது அவரின் சொந்த கருத்து என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்!
திரிபுராவை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையை அகற்ற வெகுநாட்கள் இல்லை என H.ராஜா ட்விட்டரில் பதிவிட்டது அவரின் சொந்த கருத்து என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்!
திரிபுராவில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தல்லி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் அங்கு நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை பாஜக.,வினர் அகற்றினர். அதுமட்டும் அல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அடித்து உடைத்து தீ-க்கு இரையாக்கினர்.
இதனையடுத்து பா.ஜ.க. தேசிய செயலாளா் H.ராஜா தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தினில் “லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போன்று நாளை தமிழகத்தில் பெரியார் சிலையும் அகற்றப்படும்” என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் தனது பதிவினை நீக்கிவிட்டார். என்றபோதிலும் அவரின் பதிவிற்க்கு நெட்டிசன்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் H.ராஜா-வின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ளார்.
H.ராஜா பதிவிற்கு தமிழக தலைவர்களின் கருத்துக்கள்...
திராவிட கழகம்:
"உலகத் தலைவர்களில் ஒருவரான லெனின் சிலை உடைப்பு நம் நாட்டிற்கே அவமானம். பெரியார் சிலையும் உடைபடும் என்பது திமிரின் உச்சம். முடிந்தால் அறிவித்துவிட்டு உடைக்க வரட்டும்"
MK ஸ்டாலின்:
"தந்தைப் பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் அளவிற்கு கூட யாருக்கும் தைரியம் கிடையாது. H. ராஜா தொடர்ந்து வன்முறை தூண்டும் வகையில் தன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார். எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்"
வைகோ:
"ஈ கொசு விழுந்தால் கூட பயந்து ஓடும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஊமைத்துரை பேசாதபோது நெல் உமியை கைகளில் கசக்கி பூவென்று ஊதுவாராம். திராவிட உணர்வுள்ளவர்கள் ஒரு நொடியில் அவர்களை ஊதிவிட முடியாதா?.... பெரியார் பற்றி இழிவாக பேசுவதை கண்டு திராவிட இயக்கங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனவா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமா:
"பெரியார் சிலையை தொட ராஜா-வால் மட்டும் அல்ல, அவர் முப்பாட்டன் வந்தாலும் இயலாது"
சீமான்:
"பெரியார் சிலையை தொட்டால் என்ன நடக்கும் என்று H. ராஜாவுக்கே தெரியும்’
திருநாவுக்கரசர்:
"தடித்த, தரமற்ற வார்த்தைகளால் அரசியல் கட்சிகளை, அரசியல் தலைவர்களை அடிக்கடி விமர்சனம் செய்வது என்பது திரு. எச். ராஜா அவர்களின் வாடிக்கையான செயலாகி விட்டது."
குஷ்பு:
"தேதி குறித்து வாருங்கள். முடிந்தால் எங்களைத் தாண்டி பெரியார் சிலையைத் தொடுங்கள்"
தொடர்ந்து H. ராஜா-விற்கு தமிழகத்தில் எதிர்ப்பு குவிந்து வருகிறது.....