Rajah Muthiah Medical College Latest News: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடந்த 63 நாட்களாக மேலாக போராடி வந்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை (Rajah Muthiah Medical College) பொறுத்த வரை, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 5.5 லட்சம் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விடுதிக் கட்டணமும் சேர்ந்து ரூ. 6.3 லட்சம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல பி.டி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது மற்றும் முதுகலை படிப்பிற்கு ரூ. 9.6 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை போலவே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தி வந்தன. 


ALSO READ |  69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான பிடிவாதத்தை மத்திய BJP அரசு கைவிட வேண்டும்: MKS


டிசம்பர் 9 ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்கள் மாணவர்கள் நடத்தி வந்ததால், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி தமிழக அரசின் (Government of Tamil Nadu) சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது என்றும், அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிடப்பட்டது. 


ஆனால், அதிக கல்விக் கட்டணம் (College Fees) வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசாணையில் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்தனர்.


இந்தநிலையில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610 கட்டணம், பி.டி.எஸ் படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.11,610 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணம் திரும்ப தரப்பட மாட்டாது என்றும் அரசாணையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


ALSO READ |  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கூடாது: PMK


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR