தமிழ்நாடு SSLC முடிவுகள் 2022 இன்று பிற்பகல் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 30-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.55 லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்று எழுதினர். அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் , இவர்களின் தேர்ச்சி சதவீதம் (90.07%)ஆகும். மாணவியர் 4,27,073 (94.38%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,94,920 (85.83%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | வெளியானது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்
தமிழ் 1 ( 94.84% தேர்ச்சி)
ஆங்கிலம் 45 (96.18% தேர்ச்சி)
கணிதம் 2186 (90.89% தேர்ச்சி)
அறிவியல் 3841 (93.67% தேர்ச்சி)
சமூக அறிவியல் 1009 (91.86 % தேர்ச்சி)


மாவட்ட வாரியாக அதிக தேர்ச்சி விகிதம்
1.கன்னியாகுமரி 97.22 பெரம்பலூர் சதவீதம்
2.பெரம்பலூர் 97.15 சதவீதம்
3.விருது நகர் 95.96 சதவீதம்


குறைந்த தேர்ச்சி விகிதத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 79.87 சாதவீதமே தேர்ச்சி உள்ளது.


இதற்கிடையில் சற்று நேரத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. 
தேர்வு முடிவுகள் எப்படி பார்ப்பது?
* இணையதள முகவரி : www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


* ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


* அதேபோல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


எஸ்எம்எஸ் வாயிலாகவும் தேர்வு முடிவுகள் சரிபார்க்கலாம்
பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.


மேலும் படிக்க | நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு குறித்த முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR