பள்ளிக்கு சென்ற மூன்று சிறுமிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை புழலை அடுத்த காவாங்கரை பகுதியில் இலங்கை மறுவாழ்வு முகாம் ஒன்று உள்ளது. 


இந்த முகாமில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. 


இவரது 17 வயதான மகளும் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகளும் நேற்று காலை வழக்கம்போல்
 பள்ளிக்கு சென்று உள்ளனர். 


பள்ளி முடித்து விட்டு மாலை வழக்கம் போல் அவர்கள் மூன்று பேரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் 3 மாணவிகளையும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.


மேலும் படிக்க | அதிமுக பிரமுகர் மர்ம மரணம்: கொலைக்கான பின்னணி என்ன? காவல்துறை விசாரணை! https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-member-killed-midnight-police-filed-case-and-looking-for-acquist-390672


ஆனால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும் மாணவிகள் இருக்குமிடம் தெரியாததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நள்ளிரவு சென்னை புழல் கவங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சென்னை புழல் போலீசார் காணாமல் போன 3 மாணவிகளையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் அவர்கள் படித்த பள்ளியில் வேறு ஏதேனும் பிரச்சினை இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் மாணவிகள் எங்கேனும் போய்விட்டார்களா என்று பள்ளியில் உடன் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கர் என அனைவரிடமும் புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பள்ளிக்கூத்திற்கு சென்ற 3 மாணவிகள் பள்ளி சென்ற விட்டு வீடு திரும்பாத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | போலீஸ், வக்கீல், டாக்டர் தான் டார்கெட்..! பலே திருடன் சிக்கியது எப்படி? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR