பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான சர்ச்சைகள் வலுத்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்டமசோதா இன்று தமிழக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்ததை அடுத்து, மசோதா தமிழக சட்டசபையில் இன்று நிறைவேறியது. இதனால் தமிழக ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன.
சட்டத்திருத்தம் குறித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாததால் உயர்கல்வி பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
தமிழகப் பல்கலைக் கழகச் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டதும், மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்துகிறார் என்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
மேலும் படிக்க | ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்
இந்த சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாததால் மாநிலத்தில் உயர்கல்வி பாதிக்கப்படுகிறது என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், துணை வேந்தர் நியமன உரிமை மாநில அரசிடம் இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் தலைமை நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையிலான மத்திய-மாநில உறவுகள் ஆணையத்தின் அறிக்கையையும் திரு ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இந்த ஆணையம், 2010 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த அறிக்கையி, பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டத்திருத்தம் குறித்து பேசிய செயல்தலைவர் ஸ்டாலின், “மாநில அரசுடன் கலந்தாலோசித்து துணைவேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்கிறார். இந்த நடைமுறை "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அவமதிக்கிறது" என்றும் "மக்கள் ஆட்சியின் தத்துவத்திற்கு எதிரானது" என்றும் சுட்டிகாட்டினார்.
இந்த சட்டத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், எதிர்ப்புக்கு வலுவான எதிர்வினையை பதிவு செய்த தமிழக முதலமைச்சர், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இதே முறை பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.
அதேபோல மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இதேபோன்ற நடவடிக்கையைத் தொடங்கியது என்னும் நிலையில், தமிழக அரசின் நடவடிக்கைக்கு அதிமுகவும் பாஜகவும் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்
கடந்த கால அரசியலை எண்ணி கவலை கொள்ளும் கல்வியாளர்கள், கடந்த சில ஆண்டுகளில், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கான தேடல் குழுவின் பரிந்துரைகளை தமிழக ஆளுநர் நிராகரித்த சம்பவங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
மாநிலத்துக்கு கூடுதல் சுயாட்சி வழங்க வலியுறுத்துவதன் அடிப்படையில் முன்வைக்கப்படும் இந்த மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியது தமிழக ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே NEET நுழைவு தேர்வுக்கு தமிழக அரசுக்கு விலக்கு அளிப்பதற்கான சட்டமசோதா உட்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குறைந்தது 10 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரங்களின் அண்மை நிகழ்வாக, குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் மசோதாக்களை நிலைவையில் வைத்திருக்கும் ஆளுநர் ரவியை புறக்கணிக்கும் வகையில் ஆளுநர் அளித்த தேநீர் அழைப்பை மாநில அரசு புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், துணைவேந்தர் நியமன மசோதா, குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பப்படுமா அல்லது அதும் கிடப்பில் போடப்படுமா என்பது தமிழக அரசியலில் பிரதான கேள்வியாக இருக்கிறது.
மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR