சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு மிக அதிகமாகவே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திங்களன்று தமிழ்நாட்டில் 34,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 404 பேர் இறந்தனர். இதனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 20,872-ஐ எட்டியுள்ளது.
 
இன்று 27,026 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 15,54,759 ஆக உயர்ந்துள்ளது. 



தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான (Coronavirus) சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,01,580 ஆக உள்ளது.


சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 4985 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 19,421 ஆண்களும் 15,446 பெண்களும் அடங்குவர். சென்னைக்கு அடுத்தபடியாக இன்று கோவையில், 4,277 பெர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இன்று 1,75,231 மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 35,873 ஆக அதிகரித்துள்ளது. 


ALSO READ: 890 மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர். அவர் புதுச்சேரியிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. 


இன்று 1,59,185 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரை தமிழகத்தில் (Tamil Nadu) மொத்தமாக கொரோனா பரிசோதனை செய்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,59,13,847 ஆக உள்ளது.


கடந்த வாரம் தமிழகத்தில் தொடர்ந்து எழுச்சியைக் கண்டு வந்த தொற்றின் அளவு தற்போது சரிவைக் கண்டு வருகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி இன்று 34,867 என்ற அளவில் உள்ளது. 


தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு முன்னர், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தது. ஊரடங்கின் விளைவு தற்போது தெரியத் தொடங்கியுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். 


முன்னதாக, தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (M Subramaniam), இன்று சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள 890 மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், சென்னையில் உள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையங்களில் 200 படுக்கைகள் காலியாக உள்ளன என்று கூறினார். மேலும், சென்னையில் கூடுதலாக இன்னும் சில சித்தா சிகிச்சை மையங்களையும் அமைக்க நடாவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 


கொரோனா சிகிச்சை குறித்து பேசிய அமைச்சர், கொரோனா பரிசோதனை செய்து, பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்ததும் மருத்துவமனைகளுக்கு மக்கள் படையெடுக்கத் தேவையில்லை என்று கூறினார். பாசிடிவ் என பரிசோதனை முடிவு வந்ததும், முதலில் அருகில் உள்ள ஸ்கிரீனிங் சென்டருக்கு சென்று, உடல் நலம் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளை முதலில் கேட்டறிய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


ALSO READ: முழு ஊரடங்கை கடைபிடித்து COVID19 பரவல் சங்கிலியை உடைப்போம்: முதல்வர் ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR