வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்யும்  என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் திங்கள்கிழமை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது; தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இந்த நிலை திங்கள்கிழமையும் தொடர வாய்ப்பு உள்ளது.


உள் கர்நாடகத்தில் இருந்து உள் தமிழகம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் திங்கள்கிழமை (இன்று) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.