தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து ரெய்டு படலங்களை தொடர்ந்தனர். திமுக முக்கிய புள்ளிகளை குறி வைத்து நடத்தப்பட்ட ரெய்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கும் நேரத்தில் அமலாக்கத்துறையில் இருக்கும் சிலர் ரெய்டில் சிக்கியவர்களிடம் பேரம் பேசியுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் ரமேஷ் என்பவரிடம் 50 லட்சம் கொடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். இதில் முதல்கட்டமாக 20 லட்சம் பெற்றுக் கொண்ட அவர், பாக்கித் தொகையான 30 லட்சம் ரூபாயை கொடுக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விடிய விடிய நடைபெற்ற சோதனை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்!


இதனால் அரசு மருத்துவர் ரமேஷ் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விசயத்தை கூறியுள்ளார். அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் ரசாயனம் தடவிய 30 லட்சம் ரூபாயை அவர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் கொடுத்துள்ளார். அப்போது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாக சேஸிங் செய்து பிடித்தது. அத்துடன் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அங்கித் திவாரியின் அறையில் சுமார் 15 மணி நேரம் விசராணை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கிறது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை.


மறுபுறம் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியிடம் தீவிர விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை இந்த லஞ்சத்தில் தொடர்புடைய மற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளின் பெயர்களையும் சேகரித்திருக்கிறது. பின்னர் அங்கித் திவாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அடுத்தகட்டமாக அங்கித் திவாரி கூறிய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவெடுத்துள்ளது. இதில் பல்வேறு முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அதேநேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்ச புகாரில் சிக்குவது இது முதன்முறையல்ல, கடைசியும் அல்ல என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு அதிகாரி தவறு செய்ததற்காக ஒட்டுமொத்த துறை மீதும் பழி சுமத்துவது சரியானது அல்ல என கூறிய அவர், தமிழ்நாடு போலீஸில் ஒருவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த காவல்துறையும் தவறு செய்ததாக அர்த்தமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், லஞ்ச புகாரில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.   


மேலும் படிக்க | சிபிஐக்கு மாறும் அமலாக்கத்துறை லஞ்ச வழக்கு! அடுத்த திருப்பம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ