சென்னை: ஜெய்ஹிந்த் முழக்கம் தொடர்பான சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இல்லை என்பதை பெருமையாக பேசிய திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவின் பேச்சு சர்ச்சைகளை கிளப்பியது. அது தொடர்பாக பாஜக கடுமையான கண்டனங்களை எழுப்பியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விவகாரத்தில் ஆளும் திமுக (DMK) உடன் கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ், ‘ஜெய் ஹிந்த்’ (Jai Hind) என்ற தேசபக்தி முழக்கத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளது. இது தமிழகத்தில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பேசிய திமுக எல்.எல்.ஏ, சட்டப் பேரவையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளம் மகிழ்ந்துள்ளார். திமுக எம்எல்ஏவின் இந்தச் செயலை ஒப்புக்குக் கூட இதுவரை கண்டிக்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொந்தளித்துப் போய் உள்ளார்கள் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ள


சட்டமன்றத்தில் இந்திய அன்னையை இழிவுபடுத்திய, திமுக எம்எல்ஏ சார்பில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் தமிழக சட்டப்பேரவையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள், பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற முழக்கங்களை எழுப்புவார்கள் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.   


ஞாயிற்றுக்கிழமையன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பழைய புகைப்படத்தை தமிழக காங்கிரஸ் பகிர்ந்து கொண்டது.



‘ஜெய் ஹிந்த்’என்ற முழக்கத்தை காங்கிரஸ் ஆதரவாளர்கள் முன்வைத்தனர். தமிழகத்தின் ஆளும் திமுகவின் கூட்டாளியாக இருந்தபோதிலும், தனது ட்விட்டர் கணக்கில், #PorudToSayJaiHind என்ற ஹேஷ்டேக் உடன் காங்கிரஸ் பகிர்ந்து கொண்டது.


பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைதான் இந்த விவகாரத்தை முதலில் சமூக ஊடகங்களில் (social media) கவனத்திற்குக் கொண்டுவந்தார். மத்திய அரசு என்பதற்கு பதிலாக "ஒன்றிய அரசு" (union government) என்ற வார்த்தையை தமிழக அரசு பயன்படுத்துவதை அவர் கண்டித்தார்.


2006-11 க்கு இடையில் அவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் கூட்டணியிலும், தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்தபோது இந்த வார்த்தையை பயன்படுத்தாத அரசு, திமுக இப்போது இந்த வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.


Also Read | மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR