உலகின் மிகப்பெரும் சுகாதார திட்டத்தை கொண்டு வந்த இந்திய பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தன்னோடு இணைந்து கைகோருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஓராண்டிற்கு ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடாக பெறலாம். இந்த மகத்தான திட்டத்திற்கு, உலக சுகாதார அமைப்பு பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், மிகப்பெரும் சுகாதார திட்டத்தை கொண்டு வந்ததற்காக “அமைதிக்கான நோபல் பரிசு”க்கு பிரதமர் மோடியின் பெயரை தமிழிசை பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார் அதில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு விருதுக்கு தேர்வு செய்ய என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று  வேண்டுகோள்விடுத்துள்ளார்.