Tamil Nadu BJP Leader Election Campaign in Kerala: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களுக்கு வாக்குகள் கேட்டு பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை Ex.IPS நேற்று திருவனந்தபுரம் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கி குன்னத்துகால், பாறசாலை, அமரவிளை உதயங்குளம் கரை போன்ற பகுதிகளில் நடைபெறும் மக்கள் தரிசன யாத்திரையில் பங்கேற்றார். திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூர், கம்யூனிஸ்டு கட்சி சார்பாக பனியன் ரவீந்திரன் என போட்டியிடுகின்றனர். 26ம் தேதி தேர்தல் நடப்பதையொட்டி நடந்த தரிசனயாத்திரையில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டு வரவேற்ப்பு அளித்தனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்


24ம் தேதியோடு கேரளாவில் பிரச்சாரம் ஒய்கிறது. 20 பாரளுமன்ற தொகுதிகளை கொண்ட கேரளாவில் 20 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது. திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கி தீவிர பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிகழ்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் கூறியதாவது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அதற்கான காற்று வீசதுவங்கி உள்ளது. அதற்கான விடை 26ம் தேதி தெரியும். இடதுசாரிகளும் காங்கிரஸ் வளர்சிக்கு தடையாக இருந்து, திருவனந்தபுரம் மற்றும் கேரள வளர்ச்சிக்கு என்ன செய்தனர்?  ராகுல் கேரள முதல்வரை திட்டுவதும், கேரள முதல்வரை திட்டுவதும் நாடகம். என்னை குறித்து பொய்யாக கம்யூனிஸ்டு பரப்பியதற்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் விரும்புவதாக பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.


வாக்காளர் பட்டியலில் குளறுபடி - எல்.முருகன்


முன்னதாக தேர்தல் தோல்வி பயத்தில் திட்டமிட்டு திமுக அரசு, வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்துள்ளது என்று மத்திய இணை அமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான  எல்.முருகன் குற்றம் சாட்டினார். நீலகிரியில் பா.ஜனதா வேட்பாளராக மத்திய இணை அமைச்சர்  எல்.முருகன் போட்டியிட்டு உள்ளார். இதற்காக கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டம் மற்றும் நீலகிரி தொகுதியில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய அரசின் நல திட்டங்களை எடுத்துக் கூறியும், திமுக ஆட்சியில் இருந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் வாக்கு கேட்டார். இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான கடந்த வெள்ளிக்கிழமை, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்ததால் வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைக்கும் பணி மற்றும் எந்திரங்களை கொண்டு செல்லும் பணிகளை பார்வையிட்டார். 


இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி தொகுதியில் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். இதில் பல இடங்களில் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து விடுபட்டு உள்ளது. இது குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும். இறந்தவர்கள் பலருக்கு வாக்கு இருக்கிறது, உயிரோடு உள்ள பலருக்கு வாக்குகள் இல்லை. இதனால் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை. ஊட்டி ஹோபர்ட் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் கடைசி நேரத்தில் வந்த ஒரு சிலருக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகள் நேர்மையாகவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது. பொதுமக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் தோல்வி பயத்தில் திட்டமிட்டு திமுக அரசு வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்துள்ளது என்றார்.


மேலும் படிக்க | நாடு முழுவதும் 60.03% வாக்குகள் பதிவு... 'இந்த' மாநிலம் தான் அதிகம் - இது பாஜகவுக்கு சாதகமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ