Edappadi Palanisamy News: கும்பகோணம், சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 2 குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

Edappadi Palanisamy Latest News Update: கும்பகோணம் பாலக்கரை அருகே அரசு பேருந்து ஓட்டுநர் ரமேசை நேற்றிரவு (ஏப். 20) அப்பகுதி இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த மர்ம கும்பல் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவத்தினை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த செய்தியாளர்களையும் அக்கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியது .
இதில் இரண்டு செய்தியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மற்றும் செய்தியாளர்கள் நாடிமுத்து, அருண் ஆகியோர் தனித்தனியே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
6 பேர் கைது
மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ், செய்தியாளர்கள் நாடிமுத்து, அருண் ஆகியோர் தாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ காட்சிகளில் இடம் பெற்ற நபர்களில் 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். தேர்தல் அன்று விடுமுறை, அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் நிலையில் நேற்று கும்பகோணம் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போதையில் தாக்குதல்?
கும்பகோணம் பாலக்கரை அருகே அரசு பேருந்து நேற்று இரவு வந்த போது இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு நபர்கள் பேருந்தின் மீது மோதி கொண்டனர். அவர்கள் சாலையில் இருந்து நகராமல் இருந்துள்ளனர் அவர்களை நகர்ந்து போகும்படி அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதுடன் அருகில் இருந்த தனது நண்பர்களையும் அழைத்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் செய்தியாளர்களை தாக்கிய நபர்களில் இதுவரை 6 நபர்களை பிடித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாரிமுத்து, சுதர்சன், கார்த்திகேயன் ,உதயகுமார், ஜனார்த்தனன், சந்தோஷ், ஆகிய ஆறு நபர்களைகொலை மிரட்டல் விடுத்தல் அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
இபிஎஸ் சராமாரி குற்றச்சாட்டு
இதுகுறித்து, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.
கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) April 21, 2024
அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய… pic.twitter.com/yx0BdzIkGr
அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதாக பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களும் என்னிடத்தில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கவலையளிப்பதும்,
கண்டணத்துக்கு உரியதாகும். சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்" என ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ