10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 10, 12ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணையை 2023ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in இல் வெளியிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் 2022- 2023  ஆம் கல்வியாண்டிற்கான 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான  கால அட்டவணையை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்.., 12 ம் வகுப்பு பொது தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 13 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ம் தேதி முடிவடைய இருப்பதாகவும் இந்த தேர்வு 7600 பள்ளிகளில் படிக்க கூடிய 8.80 லட்சம் மாணவ மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.


மேலும் படிக்க | JEE 2023: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு! முக்கியத் தகவல்


அதேபோல் 11 ம் வகுப்பு பொது தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி துவங்கி ஏப்ரல் 5 ம் தேதிவரை நடைபெற இருப்பதாகவும் இந்த தேர்வு 7600 பள்ளிகளில் பயிலும் 8.50 லட்சம் மாணவ மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில் , அடுத்த ஆண்டு ஏப்ரல் 6 ம் தேதி துவங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது இதை தமிழகத்தில் 12800 பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் மாணவ மாணவிகள் 3986 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர் என தெரிவித்தார்.


செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல்வர் வாரத்தில் தொடங்கி மார்ச் இரண்டாம் வாரத்திற்கு முடிவு பெறும், அதேபோல் இந்த ஆண்டு பாடத்திட்டம் குறைப்பு கிடையாது முழு பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒவ்வொரு தேர்வுக்கு போதுமான இடைவெளி அளிக்கபட்டுள்ளது  மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். காலமாற்றத்திற்கு ஏற்ப பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை பரிட்சார்த்த முறையில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். பொதுத்தேர்வுகளுக்கு முன்பாகவே  மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டங்களும் நடத்தி முடிக்கப்படும் என்றார். மேலும் தமிழக அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிராக செயலப்பட கூடிய அரசு அதிகாரிகளை ஒருபுறம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.


முன்னதாக கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 - 2020, 2020- 2021ஆம் கல்வி ஆண்டுகளில் பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை. பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களிலும் மதிப்பெண்கள் தெரிவிக்கப்படாமல் பாஸ் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.


இதற்கிடையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு பின்னர் 2022ஆம் ஆண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. ஜூன் மாதத்தில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2022-2023 ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.


இந்த நிலையில் இன்று 2022-2023 ஆண்டுக்கான 10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். அதன் முழு விவரம் இதோ:


10 ஆம் வகுப்பு: 



11 ஆம் வகுப்பு: 



12 ஆம் வகுப்பு:



மேலும் படிக்க | கம்மி விலையில் LPG சிலிண்டரை வாங்கணுமா? அப்போ இதை பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ