கம்மி விலையில் LPG சிலிண்டரை வாங்கணுமா? அப்போ இதை பண்ணுங்க

ஒவ்வொருமுறை எல்பிஜி கேஸ் சிலிண்டரை பதிவு செய்யும்போதும் ரூ. 50 முதல் 100 வரை தள்ளுபடி பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 1, 2022, 12:52 PM IST
  • எல்பிஜி சிலிண்டர் விலை.
  • LPG சிலிண்டரை கம்மி விலையில்.
  • இந்த முறைப்படி புக்கிங் செய்யுங்க.
கம்மி விலையில் LPG சிலிண்டரை வாங்கணுமா? அப்போ இதை பண்ணுங்க title=

எல்பிஜி சிலிண்டர் விலை: பணவீக்கம் அதிகரித்து வருவதால், சிலிண்டர்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இது மக்களின் பாக்கெட்டில் அதிக சுமையை ஏற்றுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இன்று நாங்கள் கம்மி விலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை எப்படி பெறுவது என்பதை காணப் போகிறோம். அதன்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஒரிஜினல் விட மலிவான விலைக்கு சிலிண்டரை வாங்கி பயனடைய முடியும்.

எல்பிஜி சிலிண்டர் விலை ரூ 115 குறைந்தது
நவம்பர் முதல் தேதியன்று மக்களுக்கு ஆசுவாசம் தரும் வகையில், வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையை அரசு குறைத்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது ரூ.1893. இதற்கு முன், 2009.50 செலுத்த வேண்டியிருந்தது. மேலும் தொடர்ந்து ஆறாவது மாதமாக வர்த்தக எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி 

குறைந்த விலையில் சிலிண்டரை எவ்வாறு வாங்குவது
உங்கள் எரிவாயு தீரும் தறுவாயில் இருக்கும்போது ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்திப் பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் ஒரிஜினல் விட மலிவான விலைக்கு சிலிண்டரை வாங்க முடியும். இந்த சேவையைப் பயன்படுத்தி பாரத் கேஸ், எச்பி கேஸ், இன்டேன் கேஸ் ஆகியவற்றை மட்டும் தான் தற்போது பதிவு செய்ய முடியும்.

சிலிண்டர் விலை மீது 100% தள்ளுபடி
பேடிஎம் ஆப்பில் ஒவ்வொருமுறை பதிவு செய்யும்போதும் ரூ. 50 முதல் 100 வரை தள்ளுபடி பெறலாம். குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே ஆஃப்பர் வரும். ஒரு சில சமயங்களில் இந்த பேடிஎம் பயன்படுத்தி 100% தள்ளுபடியை கூட (ஒரே ஒரு முறை மட்டும்) பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் மீது கிடைக்கும் கேஷ் பேக்
நீங்கள் வாங்க இருக்கும் சிலிண்டர்களை பேடிஎம் மூலம் பயன்படுத்திப் பதிவு செய்து தள்ளுபடி, கேஸ்பாக் ஆகியவற்றை பெறலாம். இந்த ஆப்ஸ் மூலம் பதிவு செய்து கட்டணம் செலுத்தும் போது மட்டுமே இந்த கேஷ் பேக் சலுகை கிடைக்கும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் நவராத்திரி பரிசு, டிஎ ஹைக் அப்டேட் இதோ!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News