10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது முடிவுகள் வெளியாகும் தேதிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அந்த வகையில் 12 ஆம் வகுப்பிற்க்கான முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க | ’மதவெறிப் பித்துப் பிடித்த’ அண்ணாமலை: திமுகவின் கடும் சாடல் பின்னணி என்ன?


10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?
இதற்கிடையில் 12 ம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டு மார்ச் மாதம்  13 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ம் தேதி முடிவடைய இருப்பதாகவும் இந்த தேர்வு 7600 பள்ளிகளில் படிக்க கூடிய 8.80 லட்சம் மாணவ மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.



மேலும் படிக்க | Bypolls: அதிமுகவும் தேமுதிகவும் கூட்டு? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு! திமுக நிலை?




அதேபோல் 11 ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 14 ம் தேதி துவங்கி ஏப்ரல் 5 ம் தேதிவரை நடைபெற இருப்பதாகவும் இந்த தேர்வு 7600 பள்ளிகளில் பயிலும் 8.50 லட்சம் மாணவ மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், ஏப்ரல் 6 ம் தேதி துவங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது இதை தமிழகத்தில் 12800 பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் மாணவ மாணவிகள் 3986 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.


மறுபுறம் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல்வர் வாரத்தில் தொடங்கி மார்ச் இரண்டாம் வாரத்திற்கு முடிவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தோழிகளின் தின்பண்டங்கள்: இயற்கையோடு பயணிக்க வைக்கும் அந்த மூன்று தோழிகள்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ