10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். +2 தேர்வுக்கு அறிவித்தது போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் இடம்பெறாது. 


தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


10 லட்சம் மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போனுக்கு முடிவு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவு தெரிந்து கொள்ளலாம். 


தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:-


> www.tnresults.nic.in


> www.dge1.tn.nic.in


> www.dge2.tn.nic.in


ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.


மேலும் மாணவர்களின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்பட்டது.