2021-22 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இந்த மாதம் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கு முன்னதாக, வரும் 9 ஆம் தேதி  நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வரவிருக்கும் பட்ஜெட்டிற்கான வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். அமைச்சர் 120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிடுவார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளை அறிக்கையில், அரசின் வருவாய் இழப்புகளுக்கான காரணங்கள், அரசின் கடன் விவரங்கள், ஆகியவை இடம்பெறும் என தெரிகிறது. 



தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiagarajan) சமர்ப்பிக்கப்போகும் வெள்ளை அறிக்கையில் சில முக்கிய அம்சங்களை கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திமுக ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகிய ஆண்டு, அதாவது, 2011 ஆம் ஆண்டில் இருந்த நிதி நிலையும், தற்போது உள்ள நிதி நிலையும் ஒப்பிட்டுக் காட்டப்படும் என கூறப்படுகின்றது. 


ALSO READ: ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது


மேலும், யாரும் எதிர்பாராத கொரோனா பெருந்தொற்றால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமை பற்றியும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படும். இந்த பெருந்தொற்று காரணமாக அரசின் செலவுகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


கொரோனா காலத்தில், மக்களுக்கு பலவித நிவாரணங்கள் வழங்கப்பட்டன. அவற்றிற்கு ஆன சுமைகளும் அரசாங்கத்தின் நிதிச்சுமையை அதிகரித்துள்ளது. குறிப்பாக, திமுக (DMK) பொறுப்பேற்ற பிறகு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் மற்றும் 14 வகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவற்றை அளிப்பதற்கு மட்டும் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா நிவாரணம் பணிகளுக்கு ஆன செலவுக்கான விளக்கமும் அறிக்கையில் இருக்கக்கூடும்.   


இந்த பட்ஜெட் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மக்களின் சுமையை அதிகரிக்காத வண்ண இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். 


ALSO READ: TN Budget: தமிழக பட்ஜெட் வெள்ளை அறிக்கையில் என்ன தகவல் இருக்கும்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR