மார்ச் 15-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்!
தமிழக பட்ஜெட் மார்ச் 15-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் மார்ச் 15-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.