சென்னை: கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதா மகிழ்ச்சியாக காணப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா நேற்று தனி அறையில் இருந்தபடி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் முடிவை தொலைக்காட்சி மூலம் பார்த்தார்.


தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில், அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள் மகிழ்சிவுடன் இனிப்பு வழங்கினர். 


இதன் மூலம் மக்கள் தன் பக்கம்தான் என நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் உடல்நலம் குறித்து நேரில் வந்து விசாரித்தவர்களுக்கும் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி என்றும் ஜெயலலிதா தன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.


திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். 


அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.


தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது.


இந்த வெற்றியை ஜெயலலிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக மருத்துவமனை அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் அவர் மகிழ்ச்சியடைந்து, உற்சாகமாக காணப்பட்டார்.