தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!!
தமிழக அமைச்சரவைக் கூட்டம், இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம், வரும், 14-ம் தேதி துவங்க உள்ளது. கூட்டத்தொடரில், துறை வாரியாக, மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு, துறை அமைச்சர்கள் பதில் அளிப்பதுடன், துறையில் புதிதாக செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவர்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம், தலைமை செயலகத்தில், இன்று மதியம் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
சட்டசபையில் முக்கிய அறிவிப்புகளை, 110 விதியின் கீழ் வெளியிடுவது குறித்தும், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.