சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடலில் பரவிய எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதித்த மீனவ குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக விழா மேடையில் ஜெயலலிதா உருவ படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மீனவக் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கினார்.


அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-


ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு செயல்படும். ஜெயலலிதா ஆட்சியில்தான் மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித்தொகையை 5,000 ரூபாய் உயர்த்தபட்டது.


2012-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் மீனவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. மீனவர்களுக்கு 5,000 வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. 


இவ்வாறு அவர் கூறினார்.