நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் டெல்லி பயணம்!!
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்!
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்!
டெல்லியில் வரும் 15 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரியும், ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகையை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 90 பக்க முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்க உள்ளதாகவும், மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.