சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டு பேருந்துகள், சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து இன்று இயக்கப்படுகின்றன. 
 
சென்னை மாநகரில் முதல் கட்டமாக, காலை உணவுத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகளும், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகள் என 10 பேருந்துகள் ரோஸ், மஞ்சள், நீலம், பச்சை ஆகிய வண்ணங்களில் இயக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து விழிப்புணர்வு பேருந்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளி குழந்தைக்கு உணவு ஊட்டிவிடுவது போல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இவை, பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 



மேலும் படிக்க | தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு


இந்நிகழ்வில், போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் தலைமையில், போக்குவரத்து ஊழியர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இந்த 10 பேருந்துகளும், அம்பத்தூர் இருந்து வேளச்சேரிக்கும், திருவொற்றியூரில் இருந்து கோவளம், மத்திய பணிமனையில் இருந்து அண்ணா சதுக்கம், தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம், பிராட்வேவில் இருந்து பூந்தமல்லி, திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர், கலைஞர் நகரில் இருந்து கேளம்பாக்கம், திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி, திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 


மேலும், வருங்காலங்களில் தமிழக அரசின் மற்ற துறைசார்ந்த திட்டங்களும் பேருந்துகளில் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | தொடர் விடுமுறை! தனுஷ்கோடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ