அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டுவதுதான் திமுக சாதனை - ரவி விமர்சனம்!

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக சாதனை என அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி விமர்சனம் செய்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 2, 2022, 09:40 AM IST
  • திமுக வை விமர்சித்த அரக்கோணம் ரவி.
  • ஸ்டிக்கர் ஓட்டுவதுதான் சாதனை என்று கூறியுள்ளார்.
  • கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பூமி பூஜையில் கலந்து கொண்டார்.
அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டுவதுதான் திமுக சாதனை - ரவி விமர்சனம்! title=

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பரமேஸ்வரமங்கலம் பகுதியில் ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் வினோத் ஏற்பாட்டின் பேரில் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் துணை கொறடா அரக்கோணம் ரவி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.  இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி.

மேலும் படிக்க | ஆ.ராசா, பொன்முடி சர்ச்சை பேச்சு - மௌனம் கலைத்த மு.க. ஸ்டாலின்

ravi

கடந்த அதிமுக  ஆட்சியில் மக்கள் நல திட்டங்களுக்காக அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இன்று ஸ்டிக்கர் ஒட்டி திமுக அமைச்சர் காந்தி திறந்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.  திமுக அரசு பொறுப்பேற்று மக்கள் விரோத சாதனையாக அரக்கோணம் பகுதியில் இயங்கி வந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை ராணிப்பேட்டைக்கு மாற்றி மக்களை அலைக்கழிப்பது திமுகவின் சாதனை என்றும்,  அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாணவர்களின் நலனை கருதி அரசு திட்டங்கள் மாணவர்களுக்கு உடனடியாக சென்றடைய ஏதுவாக அரக்கோணம் மாவட்ட கல்வி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 

ravi

அதனை தற்பொழுது ராணிப்பேட்டைக்கு மாற்றி அமைத்தது தான் திமுகவின் சாதனை என்றும்,  அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் வேறு இடத்திற்கு மாற்றி மக்களை அலைக்கழிக்கும் விரோத போக்கை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கண்டிப்பதாகவும் அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி தெரிவித்துள்ளார்.  அரக்கோணத்தில் இருந்து மாற்றப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலகம் மீண்டும் அரக்கோணத்தில் கொண்டு வர வேண்டும் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் படிக்க | 'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News