சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2021-2022 ஆம் ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். பொதுத் தேர்வுகளுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தியாளர் சந்திப்பில்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் தமிழக அரசு தேர்வுகள் துறை ஆணையர் சேதுராம வர்மா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், செயலர் காகர்லா உஷா ஆகியோரும் உடன் இருந்தனர். 


பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


- 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் 5 ஆம் தேதி துவங்கி 28 ஆம் தேதி முடிவடையும்.
- 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் 6 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி முடிவடையும்.
- 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 9 ஆம் தேதி துவங்கி மே 31 ஆம் தேதி முடிவடையும்.
- செய்முறை தேர்வுகள் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி துவங்கும். 
- பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை இன்னும் 1 மணி நேரத்தில் tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்.
- இன்னும் 1 மணி நேரத்தில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.
- பிளஸ் 2 -8.36 லட்சம் மாணவர்களும் பிளஸ்1 -8.44லட்சம் மாணவர்களும் பத்தாம் வகுப்பு -9லட்ச மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். மொத்தமாக, சுமார் 25 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுத உள்ளனர். 
- இரண்டு விதமான கேள்வி தாள்கள் தயாரிக்கப்பட்டு , தேர்வு அன்று காலையே எந்த கேள்வி தாள் அளிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளது.



மேலும் படிக்க | பெண்களுக்கு 1000 ரூபாய் திட்டம்: இந்த மாதமே அறிவிப்பு


கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடகவில்லை. அதேபோல், 1 ஆண்டுக்குப் பிறகு 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடக்கின்றன.


கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் மாணவர்கள். மாணவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவையாக கருதப்படும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளே கொரோனா காரணமாக நடக்காமல் போயின.


இந்த நிலையில், இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளை அறிவது குறித்து மாணார்கள் மற்றும் பெற்றோர் இடையே மிகப்பெரிய ஆர்வம் இருந்து வந்தது. 


பிப்ரவரி 25 ஆம் தேதியே பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அன்று எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. டிபிஐ வளாகத்தில் ஒப்பந்த பணியில் உள்ள ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்திவந்ததால், தேர்வு அட்டவணை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், தற்போது பொதுத் தேர்வுத் தேதிகள் வெளிவந்துவிட்டன. 


மேலும் படிக்க | அடுத்த ஸ்கெட்ச் ரெடி! கைது ஆகிறாரா முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR