சென்னை: தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் (Tamil Nadu Directorate of Government Examination) இன்று (திங்கள்கிழமை) பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்கள் விடைத்தாள் நகலினை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களின் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்த பின்னர், மாணவர்கள் www.dge.tn.gov.in இலிருந்து விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவிறக்கம் செய்யலாம்.


12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் (Answer Sheets) நகல் கோரியவர்கள் நாளை முதல் தங்கள் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


ALSO READ |  மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: EPS திட்டவட்டம்!


மறுமதிப்பீடு அல்லது மறுதொடக்கம் செய்ய விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 21 முதல் 25 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்


பள்ளி கல்வித் துறை (The School Education Department) ஜூலை 16 ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு மாநில வாரிய தேர்வு முடிவுகளை அறிவித்தது. திருத்தப்பட்ட பாடத்திட்டம் மற்றும் புதிய வினாத்தாள் முறை காரணமாக, அறிவியல் ஸ்ட்ரீமில் பெரும்பாலான மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றனர்.


கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry)போன்ற முக்கிய பாடங்களில் 70,000 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சில மாணவர்கள் உயிரியல் மற்றும் வர்த்தக பாடங்களிலும் (Commerce) விடைத்தாள்களை நகலெடுக்க விண்ணப்பம் செய்துள்ளனர்.


ALSO READ |  பள்ளி-கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி!


மாணவ-மாணவிகள் அனைத்து பாடங்களுக்கும் மறுகூட்டலுக்கு செய்ய ரூ .505 மற்றும் மறுகூட்டல் செய்வதற்கு ரூ .205 செலுத்த வேண்டும் (உயிரியல் (Biology) பாடத்திற்கு மட்டுமே ரூ .305 செலுத்த வேண்டும்). அவர்கள் அந்த தொகையை டி.இ.ஓ (DEO office) அலுவலகத்தில் செலுத்தலாம் (டி.டி எடுக்க தேவையில்லை).