சென்னை: செப்டம்பர் 14 முதல் 16 வரை தமிழக சட்டசபையைக் கூட்ட வணிக ஆலோசனைக் குழு முடிவு செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் கே.பழனிசாமி (K Palanisamy), துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் COVID-19 க்கு சோதனை செய்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமர்வுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் சோதனை செய்யுமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குழு அறிவுறுத்தியது.


செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டசபை (Tamil Nadu Assembly) கூட்டத்தில் பங்குகொள்வதற்கு முன்னர், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக COVID-19 சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு (Tamil Nadu Government) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.


சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் COVID-19  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.


செப்டம்பர் 11 முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவை வெளியீடு தெரிவித்தது. மேலும், சட்டமன்ற ஊழியர்கள், மார்ஷல்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் சட்டமன்ற மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் சோதனை செய்து கொண்டு தங்களுடன் "கொரோனா வைரஸ் எதிர்மறை சான்றிதழ்" வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ALSO READ: தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள COVID-19 சோதனை கட்டாயம்: தமிழக அரசு!!


சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்களின் (MLA) குடியிருப்புகளிலும், சட்டமன்ற செயலக வளாகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்களைத் தவிர, "சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட குறிப்பிட்ட அங்கீகார அட்டை உள்ளவர்கள் மட்டுமே சட்டமன்ற மண்டபத்தில் அனுமதிக்கப்படுவார்கள்."


முந்தைய அமர்வு மார்ச் மாதம் நடத்தப்பட்டது.


செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் (Saint George Fort) உள்ள சட்டசபை மண்டபத்தில், 200+ எம்.எல்.ஏ.க்கள் கூடும்போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் போகலாம். இன்றைய கொரோனா காலத்தில், இது அத்தியாவசியமானது என்பதால், அதற்கேற்ப, இந்த அமர்வு வாலாஜா சாலையில் உள்ள கலைவானர் அரங்கத்தில் (Kalaivanar Arangam) கூட்டப்பட முடிவு செய்யப்பட்டது.


COVID-19  பரிசோதனை முடிவுகள் எதிர்மறையையாக வருபவர்கள் மட்டுமே சட்டசபை அமர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


ALSO READ: COVID Impact: கலைவாணர் அரங்கத்தில் உள்ள ஆடிடோரியத்தில் நடக்கும் தமிழக சட்டசபைக் கூட்டம்!!