சென்னை: நாளை டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அங்கு நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ப்பதாக தகவல். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று அதிக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார். மோடியின் புதிய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்கபட்டது. ஆனால் அதிமுக-வுக்கு எந்தவித இடமும் அளிக்கப்படவில்லை. 


இரண்டாவது முறையாக மையத்தில் ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ள மோடி அரசு, முதல் முறையாக வரும் நாளை (ஜூன் 15) நிதி ஆயோக் கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.