Tamil Nadu: இனி தமிழகத்தில் கான்கிரீட் வீடுகள் மட்டும் தான் இருக்குமா?
தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இலவச கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இலவச கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்று தமிழ்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palaniswami) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் உச்சகட்டத்தை எட்டிவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டியது தான் எஞ்சிய நிலையில், அரசியல் கட்சிகளின் பரபரப்புக்கும் பஞ்சமில்லை, தேர்தலுக்கான வியூகம், ஊகங்கள், பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு என பல்வேறு பணிகளில் மும்முரமாக உள்ளன.
தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் அஇஅதிமுக (AIADMK) ஹாட்ரிக் சாதனை வெற்றிக்காக தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே ஆளும் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது.
Also Read | ஒடிசா சந்திப்பூரில் சோதிக்கப்பட்ட 'Made in India' VL-SRSAM ஏவுகணை சோதனை வெற்றி
தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் முன் இருக்கும் சவால்கள் பலவாக இருந்தாலும், அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றியை தக்கவைக்க தீவிரமாக செயல்பட்டு வரும் ஆளும் கட்சியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும் விதமாக சலுகைகளை அறிவித்து வருகிறார்.
தற்போது ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என்றும், சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் நிலம் வாங்கி, இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். விழுப்புரத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய அவர் “கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கும் நகர மக்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய அதிமுக அரசு, மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் நிலம் வாங்கி இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும், தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்” என உறுதியளித்தார்.
Also Read | திருமண பரிசாக LPG சிலிண்டர், பெட்ரோல், வெங்காயம் வழங்கிய நண்பர்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR