மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி, அடக்கம் செய்யவிடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய வந்த ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தமிழக முதல்வர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.


அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 



இதனிடையே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.160.93 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.160.93 கோடி என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 26.03 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் – ரூ. 5 கோடி, சுந்தரம் பாட்னர்ஸ் – ரூ.3 கோடி, ஐ.டி.சி எஜுகேஷன் – ரூ. 2 கோடி, ஆச்சி மசாலா – 1.10 கோடி, தமிழக அரசு இ- பேமண்ட்ஸ் – ரூ.97.65 கோடி, சன்மார்க் குழுமம் – ரூ. 1 கோடி, தமிழ்நாடு மெக்னசைட் லிட் – ரூ.77.30 லட்சம், தீயணைப்புத்துறை – ரூ. 64.74 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சார்பில் 14 கோடியே 10 லட்ச ரூபாய், அதிமுக சார்பில் ரூ.1 கோடி, காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ. 1 கோடி, நடிகர் அஜித்குமார் ரூ.50 லட்சம், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.