ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் -இபிஎஸ்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்ர்.
இதைக்குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரசு இதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக திறம் பட பணியாற்றி வந்தார். உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். புரட்சி தலைவி அம்மா அவர்களின் இறப்பை குறித்து பல்வேறு செய்திகள் ஊடங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் அம்மா அம்மா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும் என தனது அறிக்கையில் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.