சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் சென்னையில் நினைவிடம் அமைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடத்தை மெரினாவில்  அமைக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலைஞர் கருணாநிதியின் "நவீன தமிழகத்தை" உருவாக்கும் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் மெரினாவில் 39 கோடி ரூபாய் செலவில் நினைவுச்சின்னம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 24, 2021) அறிவித்தார்.


உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் (state Assembly) தெரிவித்தார்.



சமூக நலன், போக்குவரத்து, இலக்கியம், கல்வி, நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்த ஸ்டாலின் தனது தந்தையை "நவீன தமிழகத்தின் சிற்பி" என்று பாராட்டினார்.


"சுமார் அரை நூற்றாண்டு வரை தலைப்புச் செய்திகளில் நிரந்தரமாக இருந்த கலைஞர் கருணாநிதி 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ம் நாளன்று நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கொண்டார்" என்று கருணாநிதி குறித்து ஸ்டாலின் கூறினார். 


அவர் இறப்பதற்கு முன்பு அவர் தமிழ் சமூகத்திற்கு நிறைய நன்மைகளை செய்திருக்கிறார். தாய் தமிழகத்திற்காக அவர் செய்த மகத்தான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், அவருடைய சாதனைகளை எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் விதத்திலும் அண்ணா நினைவிடம் (திமுக நிறுவனர் மற்றும் மறைந்த முதல்வர் அண்ணாதுரை) வளாகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவுச்சின்னம் கட்டப்படும். 



பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிட வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திமுக நிறுவகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிஎன் அண்ணாதுரைக்கு காமராஜர் சாலையில் நினைவிடம் உள்ளது. அதில் கலைஞர் கருணாநிதிக்கு அமைக்கப்படும் 2.21 ஏக்கரில் அமைக்கப்படும் நினைவிடத்தில் நவீன சித்திர விளக்கங்கள் இடம் பெறும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். 


Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR