Lockdown extended:தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு
கொரோனா மூன்றாம் அலை எப்போது என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாநிலத்தில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட்டித்துள்ளார்
சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கொரோனா மூன்றாம் அலை எப்போது என்ற அச்சம் மிகுந்த கேள்விகளுக்கு மத்தியில் மாநிலத்தில் அடுத்த மாதம் இறுதி வரை, அதாவது அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட்டித்துள்ளார்
மதம்- அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. கூடுதல் தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனவே, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.
“கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும் தடை நீட்டிக்கப்படுகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைகளை வீடுகளிலேயே கொண்டாட வேண்டும், பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாவை தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி 3வது அலை தமிழ்நாட்டில் ஏற்படாத வண்ணம் தடுக்க உதவ வேண்டும்” என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா வைரஸ் பரவும் என்றும் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளதை முன்னிட்டு தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது.
Also Read | கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்! 51 பேர் மருத்துவமனையில் அனுமதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR