ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
MK Stalin | ஈரோடு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
MK Stalin, Erode by-election | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், கோவை சென்றுள்ளார். அப்போது ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், யார் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து கள ஆய்வு நடத்தினேன். 2026 தேர்தல் 200 தொகுதி இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் திமுக கூட்டணி வசம் வரும். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கோவை சென்ற அவர், கோவை மாநகர் சுங்கம் பகுதியில் கடந்த 10ம் தேதியன்று மறைந்த முன்னாள் எம்பி இரா.மோகன் இலத்திற்கு சென்று அவரது உறவினர்களை சந்தித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர் இரா.மோகன் எனவும், சாதாரண பொறுப்பில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்திற்கு பணியாற்றியவர் என்றும், அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு என்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | 11 வயதில் இரண்டு முறை சாம்பியன்! பாராட்டி நிதியுதவி வழங்கிய அரசு!
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகமாக பணியாற்ற உதவுகிறது என்றார். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்விற்கு பிறகு வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கினை தாண்டி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கு குறித்தான கேள்விக்கு ராகுல்காந்தி அவர் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பார் என பதிலளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், அந்த தொகுதி திமுக கூட்டணி வசமாகும் இந்தியா கூட்டணி வசமாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி என்பதை கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்டதற்கு, அது ஒரு கொடுமையான சட்டம் எனவும் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல் எனவும் குறிப்பிட்டார். அம்பேத்கர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து அம்பேதகர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நன்றாக பார்க்கிறேன் என பதிலளித்தார்.
மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் எப்போது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ