11 வயதில் இரண்டு முறை சாம்பியன்! பாராட்டி நிதியுதவி வழங்கிய அரசு!

சென்னையைச் சேர்ந்த ரிவான் தேவ் பிரீத்தம் இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். இச்சாதனை, தமிழக விளையாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

1 /5

சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார்.

2 /5

மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.

3 /5

இளம் சாதனையாளரான ரிவான் இன்று தமிழ்நாடு மாநில துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.

4 /5

இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காசோலையை துணை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.  

5 /5

தமிழக அரசின் புதிய முன்னோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் கீழ், மோட்டார் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர் ஒருவருக்கு அரசு நிதியுதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இச்சாதனை, தமிழக விளையாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.