வெள்ள நிவாரண நிதி கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்... எதிர்த்து கோஷமிட்ட பாஜகவினர்
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ள நிவாரண நிதி வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பாஜகவினர் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். அவர் தொடங்கியதும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜவினர் மோடி மோடி என சத்தமாக கூச்சலிட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரைக்கு இடையூறு ஏற்படுதும் வகையில் அவர்களில் கூச்சல் இருந்தது. பிரதமர் மோடி கையசைத்து அமைதியாக இருக்குமாறு கூறியபோதும், பாஜக தொண்டர்கள் கேட்காமல், சத்தமாக கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர்.
மேலும் படிக்க | திருச்சி வந்த பிரதமர் மோடி.. உற்சாகமாக வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!
இருப்பினும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து உரையாற்றினார். ஒன்றிய அரசு என கூறி தன்னுடைய உரையை தொடர்ந்தார் அவர். " திருச்சி, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின், பல்வேறு பகுதிகளில் இருந்தும் தென்தமிழ்நாட்டுக்கு, குறிப்பாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு ஆன்மீக பயணம் வருகிறார்கள். அதனால் மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும். மலேசியா, ஜப்பான் இடையே தமிழ்நாட்டுக்கு பண்பாட்டு தொடர்பு இருக்கும் காரணதால், சென்னை-பினாங்கு, சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவை வேண்டும்.
மெட்ரோ திட்ட 2ம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசின் பங்கு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறையை பொறுத்தவரை அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும். இருவழிச்சாலைகள் நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்போது, அவற்றுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது. தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். இதனை கடுமையான தேசிய பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.
கல்வி, மருத்துவம், மாநில மக்களுக்கான அவசிய தேவைகள் அனைத்தும் மக்களுக்கு நெருக்கமாக இருந்து நிறைவேற்றுவது மாநில அரசுக்கு இருக்கும் முக்கிய கடமை. அந்தவகையில், மாநிலத்துக்காக கோரிக்கை வைப்பது என்பது அம்மாநில மக்களின் நலனுக்காகவே தவிர, அரசியல் முழக்கங்கள் அல்ல. எனவே, தமிழ்நாடு அரசின் அனைத்து கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றி தருவார் என நம்புகிறேன்" என தெரிவித்தார். முதலமைச்சர் பேசி முடிக்கும் வரை பாஜகவினர் மோடி... மோடி என குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
மேலும் படிக்க | டெல்லியில் இருந்து யாரெல்லாம் வந்திருக்கீங்க? மாணவர்களிடம் கேட்ட மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ