இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.


இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியபோது, இந்தியாவின் மிக் 21  விமானமும் சிக்கிக்கொண்டது. அதில் சென்ற அபிநந்தன் பாகிஸ்தார்ன ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் கொடுத்த அழுத்தம் பின்னர் இரு நாட்களில் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.


இந்நிலையில், அண்டை நாட்டில் தனது வீரத்தை வெளிப்படுத்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் சாதனையை பெருமைப்படுத்த வேண்டும் என கூறி,. அதற்காக ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கி அபிநந்தனை கௌரவப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.