சென்னை: உலகையே தன் பிடியில் சிக்கவைத்துள்ள கொரோனா பெருந்தொற்றின் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு குறைந்து வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை ஐந்தாம் தேதியன்று தமிழ்நாட்டில் (Tamil Nadu) கொரோனா பாதிப்பு 4000க்கும் குறைவானது. இந்திய அளவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவானது.


தமிழகத்தில் 1,54,058 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்  3715 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டது தெரியவந்தது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 4,029பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.


ALSO READ: டெல்டா ப்ளஸ் வைரஸ், தடுப்பூசி செயல்திறனை குறைக்குமா; அரசு கூறுவது என்ன


இன்று 12 வயதுக்கு உட்பட்ட 179 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 54 பேர் இறந்தனர். இணைநோய்கள் இல்லாத 8 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,059 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் மேலும் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது . கோவையில் 436 பெருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


தமிழகத்தில் இதுவரை மொத்தம் 25,00,002 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் 33,059 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 34, 926 பேர் சிகிச்சை பெர்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,32,017ஆக உயர்ந்துள்ளது.


ALSO READ: New COVID Vaccine: இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லாவுக்கு அனுமதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR