சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,893 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,79,130 ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இன்று 209 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் உள்பட 8 மாவட்டங்களில் தினசரி புதிய தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேர் இறந்தனர். கொரோனா தொடங்கியது முதல் இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,367ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,363 ஆக உள்ளது.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 22 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,367 ஆக அதிகரித்துள்ளது.  


Read Also | Covovax இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறதா; SII கூறியது என்ன


தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,930 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,24,400 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று மொத்தமாக 1,50,868 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,893 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என்ற அச்சங்களுக்கு மத்தியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. நேற்றை விட தமிழகத்தில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.


Also Read | Covaxin - Covishield கலந்து கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR


இன்றைய நிலவரம்: 
• இன்றைய பாதிப்பு - 1,893


• இன்றைய மரணங்கள் - 27


• மொத்த பாதிப்பு - 25,79,130


• இன்றைய டிஸ்சார்ஜ் - 1,930


• இன்றைய சோதனைகள் - 1,50,868


Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR