கிறிஸ்துவன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்... ஆனால்... உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
Coimbatore Latest News Updates: கிறிஸ்துவன் என சொல்லிக்கொள்வதில் பெருமைக் கொள்கிறேன் என்றும் தான் அனைவருக்கும் பொதுவானவன் என்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
Coimbatore Latest News Updates: கோவை சக்தி சாலையில் உள்ள பெத்தேல் மாநகர பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (TN Deputy CM Udhayanidhi Stalin) பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"திமுக சார்பாகவும் முதலமைச்சர் சார்பாகவும் கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக் கூடிய ஒரே விழா கிறுஸ்துமஸ்.
கிறஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. கடந்தாண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்து, நான் கிறுஸ்துவன் என்பதில் பெருமைக்கொள்கிறேன் என கூறியதும் ஒட்டுமொத்த சங்கிகளுக்கும் வயித்தெரிச்சல் ஏற்பட்டது. நான் இப்போது சொல்கிறேன். நான் இன்றும் மீண்டும் உங்கள் முன் சொல்லிக்கொள்கிறேன், கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
அனைவருக்கும் பொதுவானவன்
நீங்கள் என்னை கிறுஸ்துவன் என்றால் நான் கிறுஸ்துவன், முஸ்லீம் என்றால் முஸ்லீம், ஹிந்து என்றால் ஹிந்து. நான் எல்லோருக்கும் பொதுவானவன். அப்படித்தான் எப்போதும் இருப்பேன். அனைத்து மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. மதத்தை வைத்து ஆதாயம் தேடுபவர்கள் வெறுப்பை பரப்புபவார்கள். காலையில் எழுந்த உடன் சமூக வலைதளத்தில் மதத்தை வைத்து வெறுப்பை பரப்புவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமின்றி, சமீபத்தில் ஒரு நீதிபதி கூட பொதுவெளியில் மத வெறுப்பு கருத்துக்களை கூறியிருந்தார். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான கருத்தை தெரிவித்திருந்தார். இதுபோன்றவர்கள் எல்லாம் உயர் பதவியில் இருக்க வேண்டுமா என குரல் கொடுத்தோம். எனவே அந்த நீதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மாநிலங்களவையில் கடந்த டிச.13ஆம் தேதி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
'தொடரும் அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி'
மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் என அனைவரும் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டனர். ஆனால், அதிமுக அதற்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார், அவரை எதிர்த்து கையெழுத்திடும் துணிச்சல் கூட அதிமுகவுக்கு இல்லை. அதிமுக பாஜகவின் அடிமைகளாக இன்றைக்கு வரைக்கும் இருக்கிறார்கள்.
அதேபோல் மாநிலங்களில் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்திற்கும் அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. வெளிவேஷத்திற்காகவே பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை என கூறுகிறார்கள். ஆனால், உள்ளுக்குள் அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. மேலும், சில நாள்களுக்கு முன் நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் மத்திய பாஜக அரசை எதிர்த்து ஒரு தீர்மானத்தில் கூட அவர்கள் கொண்டு வரவில்லை" என குற்றஞ்சாட்டி பேசினார்.
2026 சட்டப்பேரவை தேர்தல்
மேலும், இப்படிப்பட்ட அதிமுகவை இன்னும் சிறுபான்மையினர் நம்புகிறார்கள் என நினைக்கும்போதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது என்றும் பேசினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கதை ஒன்றை சுட்டிகாட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின், பாம்பின் நிழலைப்போல தான் அதிமுவை பார்க்கிறார்கள் என்றார்.
மேலும், சிறுபான்மை மக்களுக்கு என்றும் திமுக பாதுகாப்பாக இருக்கும் என்றும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறி இருக்கிறார் என்றும் சிறுபான்மையினர் தங்களுக்கு ஆதரவு அரணாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் சொல்லி இருக்கிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ