சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையிலும் பயணம் செல்பவர்கள் இ-பதிவு செய்து அதற்கான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்களைத் தவிர இன்று முதல் அமலுக்கு வந்த தளர்வுகளில் சுயதொழில் செய்வோர், பிளம்பர்கள், மின்சார பணிகளை செய்யும் எலெக்ட்ரிசியன்கள், தச்சர்கள் ஆகியோருக்கும் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை சுமார் 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் இ-பதிவு (TN E Pass) செய்ய முயற்சி செய்ததால், இ-பதிவு செய்யும் தளம் முடங்கியது. 


இந்த நிலையில், தற்போது காலை முதல் முடங்கியிருந்த தமிழக அரசின் இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: E-Registration: அதிகளவில் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது


முன்னதாக, இ-பதிவு தளத்தில் இரே நேரத்தில் அதிகபட்சமாக 6 லட்சம் பேர்தான் விண்ணப்பிக்க முடியும் என்றும், இன்று சுமார் 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் தளத்தில் விண்ணப்பித்தால், இ-பதிவு தளம் முடங்கியதாகவும் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். இன்று மாலைக்குள் முடக்கம் சரி செய்யப்பட்டு தமிழக அரசின் இ-பதிவு இணையதளம் மீண்டும் பணிபுரியத் தொடங்குமென்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். 


தமிழகம் (Tamil Nadu Lockdown) முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் இயங்க அனுமதி வழங்கபட்டுள்ளது. மேலும், சுயதொழில் புரிவோர், மின் பணியாளர்கள், பிளம்பர்கள் ஆகியோருக்கும் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் , இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு தங்கள் பணியை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதனால், பலவித அத்தியாவசிய பணிகளுக்காக பயணிக்க விரும்பியவர்கள், தொழில்களுக்காக இ-பதிவு பெற விரும்பியவர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் இ-பதிவு தளத்தில் விண்ணப்பித்ததால், இந்த தளம் முடக்கத்தைக் கண்டது. 


எனினும், தற்போது இ-பதிவு தளத்தில் இருந்த முடக்கம் சரி செய்யப்பட்டு, தளம் பயன்பாட்டில் உள்ளதாக தமிழக அரசு (Tamil Nadu Government) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: இ-பாஸ் மற்றும் இ-பதிவுக்கும் என்ன வித்தியாசம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR