₹250 கோடி மதிப்புள்ள சென்னை வடபழனி கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர் பாபு

சென்னை சாலிகிராமத்தில், வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக, தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 7, 2021, 04:03 PM IST
 ₹250 கோடி மதிப்புள்ள சென்னை வடபழனி கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர் பாபு title=

சென்னை சாலிகிராமத்தில், வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக, தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள வட பழனி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை நெடு நாட்களாக தனியார் ஆக்கிரமித்திருந்தனர். 

 இதை அடுத்து, இது தொடர்பான பணிகளை பார்வையிட்ட  சென்ற அமைச்சர் சேகர் பாபு, கோயில் நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். விரைவில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ALSO READ | புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“கோயில் நிலங்களைத் தனியார்கள் யாரும் உரிமை கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. ஆனால், சில இடங்கினால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த நிலம் வேறு விதமான பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்காது என்ற நிலையில், அதை வாடகைக்கு விடுவது குறித்து முடிவெடுக்கப்படும். எந்த நேரத்திலும் அதன் உரிமை விட்டுக் கொடுக்கப் பட மாட்டாது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்த இடம் வாடகைக்கு விடப்படும்.  அதனை இந்து சமய அற நிலையத்துறைத்தான் நிர்வகிக்கும்” என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது ஒஅற்றி கேட்கையில், தற்போது கொரோனா காலம் என்பதால் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி நிலையில், இயல்பு நிலை வரும் போது நிச்சயம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..

மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்து அற நிலையத்துறை அமைச்சர், 100 நாளில் இது தொடர்பான சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.

 

ALSO READ: அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News