கொரோனா தடுப்பு திட்டமான `IVRS` சேவையை தொடங்கி வைத்தார் EPS!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக `IVRS` சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக "IVRS" சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை தீர்க்க IVRS சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருக்கின்றனர். கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88,403 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனாவால் இதுவரை 166 பேர் உயிரிழந்த நிலையில், 473 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான IVRS தானியங்கி குரல் வழி சேவையை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.